கோவைப்புதூரில் புதிய இந்தியன் வங்கி கிளை துவக்கம்

இந்தியன் வங்கியின் இந்தியாவில் 2655-வது கிளையும், கோவை மண்டலத்தில் 88-வது கிளையுமாக புதிய இந்தின் வங்கிக் கிளையினை கோவைப்புதூரில் இன்று கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.



இதில் இவ்வங்கியின் மண்டல மேலாளர் ஏ.கணேசராமன், துணை மண்டல மேலாளர் பி.ஜேம்ஸ் தாமஸ், கிளை மேலாளர் ஆர்.அபிநவ் சந்தர், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி கி.சுந்தரராமன், பொதுமேளாலர் லெட்சுமிபதி மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதில் மண்டல மேலாளர் ஏ.கணேசராமன் பேசுகையில், வங்கிகள் வளர அதன் நம்பகத்தன்மை, சேவை செய்யும் முறை மிகவும் முக்கியமாகும். பராம்பரியமான வங்கிகள் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது.

கோவை மண்டலத்தில் இந்தியன் வங்கி 3000 கோடிகள் வர்த்தகம் ரீடையில் துறையில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று விவசாயத்துறையில் 700 கோடி வரை வர்த்தகம் இந்தியன் வங்கியில் இம்மண்டலத்தில் நடைபெற்று வருகிறது.

இம்மண்டலத்தில் டெக்ஸ்டைல் துறை வர்த்தக பரிமாற்றத்தில் குறிப்பிடும்படியாக உள்ளது. ஆனால் விவசாயத்துறை மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாய வர்த்தகம் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதனை உயர்த்த இந்தியன் வங்கி செயல்பட முனைப்புடன் உள்ளது. மேலும் இம்மண்டலத்தில் இவ்வங்கி கோழிப்பண்னை வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்த உள்ளது.

ரியல் எஸ்டேட் துறை மிகவும் குறைந்து வங்கி வர்த்தக பரிமாற்றதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கோவைப்புதூர் கோவையில் வளர்ந்து வரும் பகுதியாக திகழ்கிறது. அதனால் இங்கு இப்புதிய கிளையினை தொடங்கியுள்ளோம் எனக் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...