போலீசார் அழைத்துச் சென்ற வாலிபரின் நிலை என்ன? : கமிஷனர் அலுவலத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்


கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரது மகன் அபுதாகிர். இவர் உக்கடம் பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் அபுதாகிரை துப்பாக்கி முனையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து அபுதாகிர் வீட்டிற்கு போலீசார் தகவல் எதுவும் தராததால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் உக்கடம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அபுதாகிர் இல்லை என்று போலீசார் பதிலளித்ததால் பதற்றமடைந்த அவர்கள் மேற்கொண்டு சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கும் அபுதாகிர் இல்லாததால் மேலும் பதற்றமடைந்த அபுதாகிரின் பெற்றோர் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபரின் நிலை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.



தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார், அபுதாகிர் குறித்த தகவல் இன்று மாலைக்குள் தெரிவிக்கப்படும் என்றனர். ஆனாலும் கூட்டத்தினர் கலைந்து செல்ல மறுத்தனர்.



தொடர்ந்து, அபுதாகிரின் பெற்றோர்கள் மட்டும் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், அபுதாகிரிடம் விசாரணை முடிந்த பின்னர் அவரை பார்க்களாம் என்றும், மற்றவர்களை கலைந்து செல்லுமாறு சொல்லும்படியும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...