குடும்ப அட்டை வழங்கக்கோரி கோவையில் வசித்து வரும் வட மாநில மக்கள் ஆட்சியரிடம் மனு

குழந்தைகளின் பள்ளிப்படிப்பிற்கு குடும்ப அட்டை தேவைப்படுவதாகவும், அது இல்லாமல் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறி கோவை போத்தனுர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டம் போத்தனூர் பகுதில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்துவரும் நாங்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். 30 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்துவரும் எங்களுக்கு ஆதர் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. அவை எங்களுக்கு தேர்தலின் போது வாக்களிக்க  மட்டுமே  பயன்படுகிறது.

அனால், எங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல குடும்ப அட்டை தேவைப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு குடும்ப அட்டை வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், வாடகை வீடு மற்றும் சாலையோரம் வசித்து வரும் எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...