உடுமலை கல்குவாரிகளில் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு!

திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள கல்குவாரிகளில் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், உடுமலை, மடத்துக்குளம், பழனி தாலுகாவிலுள்ள குவாரிகளிலிருந்து, கேரளாவுக்கு, தினமும், 200 லோடு, ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, கனிமங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம், கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு சென்ற, 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சச்சின் ஆனந்த் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அனுமதிக்கப் பட்ட அளவை விட, கூடுதலாக, கனிம வளங்கள் ஏற்றியதாக, 9 லாரிகளுக்கும், ரூ.5.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கனிம வளத்துறை உதவி இயக்குனர் சச்சின் ஆனந்த் கூறியதாவது,

சட்டவிரோத கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து, திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறைக்கு தகவல் கொடுத்து, குவாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக உள்ள கனிம வளங்கள் பறிமுதல் செய்து, உரிய ஆய்வு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...