அரசின் சீரிய செயல்பாட்டின் காரணமாக நடப்பாண்டிற்கு ரூ.478.26 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

கோவை வணிகவரி அலுவலக கூட்டரங்கில் இன்று (6.03.2017) மண்டல அளவிலான வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் அமைச்சர் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி மாநில அரசுக்கு வணிக வரிகள் மூலம் திரட்டப்படும் நிதி ஆதாரம் மிக முக்கியமானது மட்டுமல்ல, முதன்மையான ஆதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 2016- 2017 ஆம் நிதியாண்டில் ஜனவரி 2017 மாதம் வரை ரூ.3667.34 கோடிகள் மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வரி 2015- 16ல் இதே காலத்தில் வசூலான ரூ.3189.08 கோடிகளுடன் ஒப்பிடும்போது ரூ.478.26 கோடிகள் கூடுதல் வருவாய் ஆகும். அதாவது 15 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது.

2016-17 ஆம் நிதியாண்டில் நமூனாக்களை கூர்ந்தாய்வு செய்தல் மூலமாகவும், செயலாக்கப் பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ள கருத்துருக்களை செயல்படுத்துதல் மற்றும் பழைய வரி நிலுவைகளை வசூல் செய்தல் மூலமாகவும் வணிகவரித்துறை அலுவலர்கள் கூடுதல் முயற்சி எடுத்து வரிவருவாயைப் பெருக்கி அதிக வளர்ச்சி விகிதத்தினை எட்டவேண்டும்.

மொத்த வணிகர்கள் எண்ணிக்கையில் 87 சதவிகிதம் வணிகர்கள் நமூனாக்களை இணையம் மூலமாக தாக்கல் செய்துள்ளார்கள். மேலும் மொத்த வரி வருவாயில் 95 சதவிகிதத்திற்கு மேல் இணையம் மூலமாக பெறப்பட்டுள்ணளது.

வணிகவரித்துறையின் வரிவிதிப்பு மற்றும் செயலாக்கம் ஆகிய இரு பிரிவுகளும் போலிவணிகம் செய்பவர்கள் மீது ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கை எடுத்தும், தவறான உள்ளீட்டு வரிவரவு பெற்று பயனடைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வரிவருவாயினை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், எதிர்மறை வளர்ச்சி மற்றும் குறைவான வளர்ச்சி அறியப்படும் வணிக இனங்களில் கூர்ந்தாய்வு செய்து காரணங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். துரித நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையிலுள்ள வரி வருவாயை வசூலிக்க வேண்டும். மேலும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசு வருவாயை பெருக்க வேண்டும்.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை எளிய மக்களுக்கான சிறப்புத் திட்டங்களுக்கு நமது துறையின் மூலம் கிடைக்கும் வரி வருவாய் முக்கியப்பங்காற்றுவதால் நமது துறையின் பணிகள் மிகவும் அர்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வணிக வரித்துறை இணை ஆணையர்கள் ரஷ்மிசித்தார்த் ஜகடே, அனிஷ்சேகர், கூடுதல் ஆணையர்கள் ரத்தினசாமி, கர்வர்ஆலம் மற்றும் வணிகவரித்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...