பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சூசகம்!

கோவையில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருப்பதால் இதுபோன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. நாங்கள் யாரென்று பாஜகவுக்கு முதல்வர் தெரியவைப்பார் என்றார்.



கோவை: பாஜகவுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை என்றும், நாங்கள் யாரென்று முதல்வர் பாஜகவுக்கு தெரியவைப்பார் எனவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.



கோவையில் ஹோப் கல்லூரி அருகிலுள்ள டைடல் பார்க்கை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 







கோவைக்கு இன்னும் பல புதிய திட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். கோவையில் இன்னும் பல தொழில்கள் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான நிலங்களை தேர்வு செய்து வருகிறோம். 

பிரபல லூலு நிறுவனத்தை தமிழகத்தில் நுழைய விட மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்நிலையில் இன்று அந்த நிறுவனத்தை கோவையில் திறப்பது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் சொன்னார் நாங்கள் திறந்து வைக்கிறோம் என இதுபோன்று சிறுபிள்ளை தனமாக பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க தேவையில்லை. 

மேலும் செந்தில்பாலாஜி கைது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜக இதுபோன்று சிறுபிள்ளை தனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுகவை பற்றி இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை. இது போன்ற பல முதலைகளை சந்தித்த இயக்கம் திமுக. 

இந்த அடக்குமுறையிலிருந்து மீண்டும் வலிமையோடு எழுந்து வெற்றி நடைபோடுவோம். திமுகவைக் அடக்க வேண்டுமென்று நினைத்தால் இன்னும் வேகமாக எழுவோம். இதுக்கெல்லாம் பயந்து போகின்ற இயக்கமில்லை. கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. 

பதவியில் இருக்கிறார்கள் என்று சிலர் ஆடுகின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களே சொல்கின்றனர். மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு சவாலாக இருக்கிறது என்பதால் அவர்களிடம் உள்ள துறையை ஏவிவிட்டு இது போன்று பழிவாங்குகின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. முதல்வர் நாங்கள் யாரென்று பாஜகவுக்கு தெரியவைப்பார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...