கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோவை நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோவை நீதிமன்றம் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை நீதிமன்ற வளாகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை தென்னிந்தியாவில் அமைக்க வேண்டும், அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் வழக்கறிஞர்களுக்குத் தனி ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



மேலும், இ-பைலிங் (e-Filing) நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்க வேண்டும், தனியார் சட்டக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கல்விக் கட்டண முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அதேபோல், கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் நிழற்கூரை வசதி ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு தளத்திலும் குடிநீர் வசதி செய்ய வேண்டும், வழக்கறிஞர்கள் அமர்வதற்கு போதுமான நாற்காலிகள் அமைக்க வேண்டும், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் அவசர மருத்துவ தேவைக்காக ஐ.சி.யு. வசதி கொண்ட ஆம்புலன்ஸை நீதிமன்ற வளாகத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.



கோவை நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...