பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தை கண்டித்து கோவை வட்டாசியர் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


30 ஆண்டுகளாக பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தைக் கண்டித்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவையில் செயல்பட்டு வந்த நவஇந்தியா நிறுவனம், நிர்வாக குறைபாடு காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையை வழங்காததால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து சில ஆண்டுகளுக்கு முன் 50 சதவிகித பணிக்கொடை வழங்கப்பட்டது. அதன் பிறகு வழங்க வேண்டிய மீதம் 50 சதவிகித தொகையை இது வரை வழங்காமல் அந்நிறுவனம் காலம் தாழ்த்துவதை கண்டித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நவஇந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய 180 ஊழியர்களுக்கு இது வரை முழுமையான பணிக்கொடை வழங்கவில்லை. அதில் சில ஊழியர்கள் தற்போது இறந்துவிட்டதால் அந்த தொகையை அவர்களது குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கைகளை ஏற்று நவஇந்தியா நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடவுள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...