பாஜகவை யாராலும் அழிக்க முடியாது - மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் பேச்சு

கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் சுமார் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.


கோவை: மதுக்கரை மார்க்கெட் பகுதியில் திமுக அரசை கண்டித்து கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் வசந்தராஜன்:-

தமிழின் பெருமை நமது பாரத பிரதமர் மோடி அனைத்து இடங்களிலும் பேசி வருகிறார். தமிழை வளர்ப்போம் என கூறும் தற்போதைய அரசுக்கு தமிழ் தாய் வாழ்த்தை கூட பாடத் தெரியாது. தமிழ் பாட புத்தகங்களில் வரும் பாடங்களை பார்த்தால் பயமாக உள்ளது.

இன்று அம்மா என்று யாரும் அழைப்பதில்லை மம்மி என்று தான் அழைக்கிறார்கள் அந்த அளவில்தான் தமிழ் உள்ளது என பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் கூறியதாவது:-



தமிழகத்தில் திமுகவின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் தமிழை அழித்து வருகின்றனர். அமைச்சர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் நடத்தும் பள்ளிகளில் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை வைத்துள்ளனர்.

அது மட்டுமல்ல அங்கு தமிழில் பேசினால் ரூ. ஆயிரம் வரை அபராதம் விதிக்கிறார்கள். கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 44,500 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதுதான் தமிழை வளர்க்கும் விதமா என கேள்வி எழுப்பினார்.

மேலும் பாஜகவை யாராலும் அழிக்க முடியாது. குறிப்பாக பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ராகுல் இருக்கும் வரை பாஜகவை அளிக்க முடியாது என தெரிவித்தார். ஏனென்றால் காந்தி என்ற பெயரில் ஏமாற்றி வரும் ராகுல் கோவாவில் காலடி வைத்தார்.

7 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு வந்தனர். அதேபோலத்தான் ராஜஸ்தான் மாநிலத்திலும் நிகழ்ந்தது. அவர் இதே போல் இந்தியாவில் அனைத்து பகுதிக்கும் செல்ல வேண்டும். இறுதியாக அவர் டெல்லி வரும்போது தற்போதைய பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக இருப்பார் என தெரிவித்தார்.

நாங்கள் PFI அமைப்பை தடை செய்ய தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போதைய அரசு அவர்களை கண்டுபிடித்து அந்த அமைப்பை தடை செய்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும்.

குறிப்பாக பொள்ளாச்சி தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறிய அவர் வரும் 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக தான் ஆட்சி அமைக்க உள்ளது. அதை தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு யாராலும் பாஜக ஆட்சியை அசைக்க முடியாது இறுதியாக தமிழை அழிக்க நினைக்கும் திமுக விற்கு இது கடைசி ஆட்சியாக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...