பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 குறைப்பு

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

அந்த வகையில் நேற்று இரவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ1.53 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.

புதிய விலை குறைப்பின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65.41க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டர் ரூ.56.24க்கு விற்பனையாகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...