கர்நாடகாவில் வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: சித்தராமையா அழைப்பு

காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர். கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வருகிற வாரம் இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என முறையிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடக நலனைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...