திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. இதேபோல, மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. இதேபோல, மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டப்பேரவைகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த மாதம் 18-ம் தேதியும், நாகலாந்து, மேகாலயாவில் 27-ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களில் தலா 60 தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் இறந்ததால், ஒரு தொகுதியிலும், மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதால் ஒரு தொகுதியிலும், நாகலாந்தில் என்.டி.பி.பி., கட்சி தலைவர் நெபியு ரியோ போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளதால் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெறவில்லை. இதனால், இம்மாநிலங்களில் தலா 59 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. 

திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதலமைச்சராக இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் 49 இடங்களைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க., வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர். தொடக்கத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 30 இடங்களைக் கடந்து முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு, பா.ஜ.க., நெருக்குதல் கொடுத்து பின்னுக்கு தள்ளியது. தொடர்ந்து முன்னிலை வகித்த பா.ஜ.க., 40 இடங்களைப் பிடித்து வெற்றி அடைந்துள்ளது. திரிபுரா சட்டப்பேரவையில் கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத பா.ஜ.க., இந்த முறை ஆட்சி அமைக்கிறது. 

மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, முகுல் சங்மா முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தற்போதைய தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய வகையில், 24 தொகுதியைக் கைப்பற்றியுள்ளது. நாகலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., 32 இடங்களைப் பிடித்துள்ளது. இங்கும், பா.ஜ.க., கட்சியே ஆட்சியைப் பிடிக்கிறது. மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது உறுதியான நிலையில், திரிபுராவிலும், நாகலாந்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திரிபுரா, நாகலாந்தில் பா.ஜ.க., தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.  

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...