ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது முட்டை வீச்சு.. இளைஞர் கைது

பரிபடா: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது மாணவர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பான்ஜ் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக முதல்வர் நவீன் பட்நாயக் சென்றார். சுலியபடா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த விழாவில் முதல்வர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த மாணவர் காங்கிரஸ் தொண்டர்கள், நவீன் பட்நாயக் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மாணவர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் முதல்வர் நோக்கி திடீரென முட்டையை வீசினார். ஆனால் அது அவர் மீது விழவில்லை. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்குள் முட்டை வீசிய காங்கிரஸ் தொண்டரை அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர்அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...