பேருந்தில் ரூ. 1 கோடி பணம் பறிமுதல்- புதுச்சேரி போத்தீஸ் கடையில் வருமானவரி சோதனை

சென்னை: புதுச்சேரி போத்தீஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி ஜவுளிக் கடையில் இருந்து பணத்தை எடுத்து வந்த ஊழியர்கள் 4 பேரை கிளியனூர் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி ஜவுளிக் கடையில் இருந்து உரிய ஆவணங்கள் எதுவும் இருந்து பணத்தை எடுத்து வந்த ஊழியர்கள் 4 பேரை கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த பணம் புதுச்சேரி போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு சொந்தமான பணம் என்று கூறப்பட்டதை அடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜவுளிக்கடையில் இருந்த ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டு அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...