தமிழக நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமனம்: மத்திய அரசு முடிவு?

டெல்லி: தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் என உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து வித்யாசாகர் ராவ், செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநராக பதிவியேற்றுக்கொண்டார்.

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் உடல்நலம் தேறி வந்தாலும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதல்வர் வகித்துவந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவை கூட்டங்களுக்கும் அவரே தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரைவில் நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் எனவும், அவர் தற்போது வகித்து வரும் மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்புக்கு கர்நாடகா மாநில மூத்த பாஜக தலைவர் டி.ஹெச். சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...