பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த அதிரடி தாக்குதல்... ஆதாரங்களை அளித்தது ராணுவம்!

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான விடியோ ஆதாரங்களை மத்திய அரசிடம் இந்திய ராணுவம் அளித்திருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்தார்.

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசிடம் விடியோ ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, டெல்லியில் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், புதன்கிழமை கூறுகையில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ அல்லது பிரதமரோ விளக்கம் அளிக்கவில்லை. அது தொடர்பாக, ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்தான், ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோ பதிவுகள், மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன," என்றார் அவர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...