எல்லை தாண்டியபோது பாக். ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர்.. 8 வீரர்கள் கொல்லப

டெல்லி: கட்டுப்பாட்டு எல்லையை மீறி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின்போது, பாகிஸ்தான் ராணுவத்தினரால், 8 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்திகள் பொய்யானவை என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா புதன்கிழமை இரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும், தீவிரவாத இலக்குகளை குறிவைத்து நடத்தும் தாக்குதலை வெற்றிகரமாக முடித்து சுமார் 40 தீவிரவாதிகளை கொன்று குவித்து ஆபத்தின்றி திரும்பியது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஊடக செய்திகளில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 8 வீரர்கள் இத்தாக்குதலின்போது உயிரிழந்ததாகவும், ஒருவரை உயிருடன் பிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயதாகும், சந்து பாபுலால் சவுகான் என்ற ராணுவ வீரர் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்திய ராணுவமோ தங்கள் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என கூறியுள்ளது. அதேநேரம், சந்து பாபுலால் தவறுதலாக எல்லையை தாண்டியதாகவும் அப்போது பிடிபட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...