பாகிஸ்தான் திருப்பியடிக்கும் அபாயம். எல்லை கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்

சண்டிகர்: இந்திய விமானப்படைத் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தால் பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச எல்லையையொட்டியுள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், புகுந்து இந்தியா நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் தரப்பிலிருந்து பதிலடி வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து எல்லை நெடுகிலும் ராணுவம் தீவிரக் கண்காணிப்பில் உள்ளது. எதற்கும் தயார் என்ற நிலையில் ராணுவம் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் அனைத்தும் தற்போது காலியாகி வருகிறது. அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளைக் காலிசெய்து விட்டு கூட்டம் கூட்டமாக வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ள மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். தீவிரவாதிகள் புகுந்து தாக்கக் கூடும் என்பதால் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதனால் எல்லைப் புற கிராமங்களில் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...