இரு முனை அடி.. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்.. பாராசூட் மூலம் பாக்.குக்குள் குதித்து த

டெல்லி: பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மொத்தம் 8 இடங்களில் தாக்கியுள்ளது இந்திய விமானப்படை. இந்த தாக்குதலில் ராணுவமும் கூடவே சேர்ந்து நடத்திய தாக்குதலால் தீவிரவாதிகள் நிலைகுலைந்து போய் விட்டதாக ராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தொடர்ந்து ஊடுறுவலை நடத்தி வந்தது பாகிஸ்தான். அந்த நாட்டு ராணுவத்தின் உதவியுடன் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுறுவி வந்த ஜம்மு காஷ்மீரை சீரழித்து வந்தனர். இந்த நிலையில்தான் யூரி தாக்குதல் வந்து சேர்ந்தது. இதற்குப் பழிவாங்கும் வகையில் நேற்று அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படையும், ராணுவமும் சேர்ந்து நடத்தின.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மொத்தம் 8 இடங்களில் விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன. இதில் பல நூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ராணுவமும் உள்ளே புகுந்து தாக்கியுள்ளது.

விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பாராசூட் வழியாக பாகிஸ்தானுக்குள் குதித்து இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் அதிரடியாக தாக்கியுள்ளனர். இந்த இரு முனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் தரப்பு திணறிப் போய் விட்டதாக இந்திய ராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...