ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். 

வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காலை 5 மணி முதல் அந்தப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர். ஜின் பகுதியில் 8 தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. 

பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நெருங்கி விட்டதாகவும், என்கவுன்ட்டர் தொடர்ந்து வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடந்து வருகிறது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...