பரபரப்பான சூழலை ஏற்படுத்திய "நீட் தேர்வு" முடிவுகள் இன்று வெளியீடு

மருத்துவத்திற்கான நீட் தேர்வினை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், மருத்துவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, இதனால் ஏழை, எழிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் அவசரம் சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே மொத்தம் 65,000 எம்பிபிஎஸ் இடங்களுக்காகவும், 23,000 பிடிஎஸ் இடங்களுக்காகவும் தேர்வில் கடந்த மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 88 அயிரம் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். 

இத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 8ம் தேதியன்று வெளியிடப்படவிருந்த நிலையில், பிறமொழிகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களில் பாரபட்சம் இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூன் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தார்.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கினர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை சிபிஎஸ்இ வாரியமே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் வரும் 26-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இன்று நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. 

"cbseneet.nic.in" என்ற இணையதளத்தில் மாணவர்கள் நீட் தேர்விற்கான முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...