தாராபுரத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் (புதன்கிழமை) காலையில் 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு குறை நிறைகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் (புதன்கிழமை) காலையில் 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் கலந்து கொள்கிறார்.

எனவே மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு கூட்டத்தில் குறை நிறைகளை கூறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...