கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.



கோவை: தமிழ்க்கனவு நிகழ்வின் மூன்றாவது நிகழ்வு வரும் 22.09.2023 அன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தமிழ்க்கனவு நிகழ்ச்சி- முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டத்தில் தமிழ்க்கனவு நிகழ்வின் மூன்றாவது நிகழ்வு வரும் 22.09.2023 அன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதாகவும் "எனக்குள் ஒரு தலைவன்" என்னும் பொருண்மையில் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படவுள்ளதாகவும், மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, நான் முதல்வன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...