கோவையில் வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஐந்தாம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் வரும் 5ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8:00 மணி அளவில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐடி துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் 20,000 மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

இதில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம் எனவும் இம்மகாமிற்கு வரும் அனைவரும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த முகாமல் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அல்லது [email protected] என்ற முகவரியில் விவரங்களை அனுப்பி விருப்பத்தினை தெரிவிக்கலாம்.

அதேசமயம் வேலை அளிப்போர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Employer Login ல் விவரங்களை பதிவு செய்தல் அவசியம்.

மேலும் விவரங்களுக்கு வேலை அளிப்போர் 9790199681 என்ற எண்ணை, தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மனுதாரர் 9499055937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...