கோவை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல் தேர்வு


கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு கோவை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்காணல் தேர்வு கோவை மண்டலத்தில் சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்தில் உள்ள முகவரிக்கு நேர்காணலில் கலந்துகொள்வதற்கான அழைப்பாணை அஞ்சல் வழியில் அனுப்பப்பட்டுள்ளது.

அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும், நேர்முக அழைப்பாணை கிடைக்கப்பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை www.tn.gov.in à®Žà®©à¯à®± இணையதலத்தில் டிசம்பர் 22ம் தேதிமுதல் பதிவிக்கம் செய்துகொள்ளலாம். மேலும், 23 மற்றும் 24ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

நேர்முக அழைப்பாணைகள் இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...