கோவை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல் தேர்வு


கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு கோவை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்காணல் தேர்வு கோவை மண்டலத்தில் சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்தில் உள்ள முகவரிக்கு நேர்காணலில் கலந்துகொள்வதற்கான அழைப்பாணை அஞ்சல் வழியில் அனுப்பப்பட்டுள்ளது.

அதனில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும், நேர்முக அழைப்பாணை கிடைக்கப்பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை www.tn.gov.in என்ற இணையதலத்தில் டிசம்பர் 22ம் தேதிமுதல் பதிவிக்கம் செய்துகொள்ளலாம். மேலும், 23 மற்றும் 24ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

நேர்முக அழைப்பாணைகள் இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...