கோவை மாநகராட்சி சார்பில் கல்லூரி படிப்பு முடித்த மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த 2 மாத பயிற்சி!

கோவையில் UG/ PG/ Mphil/ Phd. இறுதியாண்டு மற்றும் படிப்பை முடித்த மாணவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணி குறித்த செயல்பாடுகளை அறிந்து கொள்ள 2 மாத பயிற்சி ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு.


கோவை: கோவை மாநகராட்சி சார்பில் கல்லூரி இறுதியாண்டு மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த 2 மாத பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை‌ மாநகராட்சி நிர்வாகத்தின்‌ திடக்கழிவு மேலாண்மை பணியின்‌ செயல்பாடுகளை அறிந்து கொள்ள இறுதி ஆண்டு (UG/ PG/ Mphil/ Phd.) கல்லூரி படிப்பு முடித்த மாணவ, மாணவியா்களுக்கு SBM - Urban TULIP-ன் கீழ்‌ இரண்டு மாதங்களுக்கு பயிற்சி வழங்க அழைக்கப்படுகிறது.

பயிற்சி அளிக்கப்படும்‌ 2 மாதங்களுக்கும்‌ மாதம்‌ ரூ.5000/- ஊக்கத்தொகை வழங்கப்படும்‌. மாணவ, மாணவியர்கள்‌, தங்களது விண்ணப்பங்களை http://internship.aicte-india.org/moduleulb/Dashboard/Tulipmain என்ற இணைய தளத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

பயிற்சி முடிந்தவர்களுக்கு AICTE Portal மூலம்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சான்றிதழ்‌ வழங்கப்படும்‌. இந்த நல்வாய்ப்பினை கல்லூரி நிர்வாகங்கள்‌ பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...