கோவையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம்!

கோவையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு வரும் 7-ம் தேதி முகாம், கோவை தாமஸ் கிளப் வளாகத்தில் நடக்க உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 7 ம் தேதி நடைபெறவுள்ளது.

108 சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய முற்றிலும் இலவச சேவையாகும்.

தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ், EMRI GREEN HEALTH SERVICES நிறுவனத்துடன், அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து தமிழக மக்களுக்காக செயலாற்றுகிறது. சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை, தொழிலாளர் ஆணையர் அலுவலகம பின்புறம், DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியை தலைமை இடமாகக் கொண்டு 108 அவசரகால சேவை மையம் இயங்கி வருகிறது.

EMRI GREEN HEALTH SERVICES நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது. அதற்கான விவரங்கள் கீழ்வருமாறு;

பணி நேரம்: 12 மணி நேர ஷிப்ட் முறையில். இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும்.

ஓட்டுனருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி

வயது: நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பாலினம்: ஆண் மற்றும் பெண்.

உயரம்: 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்

ஓட்டுநர் தகுதி: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் Badge வாகன உரிமம்.

அனுபவம்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும்.

தேர்வு முறை:

1. எழுத்துத் தேர்வு

2. தொழில்நுட்பத் தேர்வு

3. மனிதவள துறை நேர்காணல்

4. கண்பார்வை & மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு

5. சாலை விதிகளுக்கான தேர்வு .

மாத ஊதியம்: ரூ.15235/- (மொத்த ஊதியம்). தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும் (பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி செய்துதரப்படும்)

மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்:

கல்வித்தகுதி: Category Qualification Age work Salary / Stipend EMT B Sc. நர்சிங், அல்லது GNM, ANM, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்). அல்லது Life Science Graduates (B.Sc. Zoology, Botany, Bio chemistry, Micro Biology, Biotechnology,) 19 – 30 years Willing to work in shifts (Day shift or night shift) Rs.15,435 /- plus allowances as applicable.

பாலினம்: ஆண் மற்றும் பெண்.

தேர்வு முறை: 1. எழுத்துத் தேர்வு 2. மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை 3. மனிதவளத் துறையின் நேர்முகம்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். (பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி செய்துதரப்படும்).

மேலும் விவரம் அறிய விரும்புவோர் 7397444147, 7397724827, 9154189423 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாம் வரும் 7 ம் தேதி, கோவை ரயில் நிலையம் அருகே தாமஸ் கிளப், போலீஸ் உணவகம் அருகில் நடக்க உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...