கோவை மாநகராட்சியில் இரண்டு நாட்கள் சிறப்பு வரிவசூல் முகாம் - மாநகராட்சி ஆணையர் பிரதாப் தகவல்

நடப்பு 2022-23-ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டில் கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில்வரி மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ முதலிய அனைத்து நிலுவைகளையும்‌ செலுத்த ஏதுவாக மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில்‌ 18 மற்றும் 19ஆம்‌ தேதிகளில்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி சார்பில் பிப்.18, 19 தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடப்பு 2022-23-ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டில் கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில்வரி மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ முதலிய அனைத்து நிலுவைகளையும்‌ செலுத்த ஏதுவாக மாநகராட்சிக்குட்பட்ட கீழ்க்கண்ட வார்டுகளில்‌ 18 மற்றும் 19ஆம்‌ தேதிகளில்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளது.

கிழக்கு மண்டலத்தில் வார்டு எண்‌.5இல்‌ விசுவாசபுரம்‌ மற்றும்‌ வழியாம் பாளையம்‌ பகுதிகளிலும்‌, வார்டு எண்‌.7இல்‌ நேரு நகா்‌ பள்ளியிலும்‌, வார்டு எண்‌.24இல்‌ குருசாமி நகர் மின்சார வாரியம்‌ அலுவலகப்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌ 55இல்‌ நீலிக்கோணாம்பாளையம்‌ பேருந்து நிலையப்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌ 56ல்‌ காயா நகர்- ரயில்வே கேட்‌ பகுதியிலும்‌, வார்டு எண்கள்‌. 57, 58 ஒண்டிப்புத்தூர்- நெசவாளர் காலனி பகுதியிலும்‌ நடைபெற உள்ளது.

மேற்கு மண்டலத்தில், வார்டு எண்‌.17இல் கவுண்டம்பாளையம்‌ - சிவா நகா்‌- ஆதமங்கள விநாயகர் கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு எண்‌.35இல்‌ இடையாபாளையம்‌ கற்பக விநாயகர் கோவில்‌ வளாகத்திலும்‌, வார்டு எண்‌.38இல்‌ 19ஆம்‌ தேதி மட்டும்‌ வடவள்ளிபட்டி விநாயகர் கோவில்‌- ஐஓபி காலனி பகுதியிலும்‌, வார்டு எண்‌.40இல்‌ 18ஆம்‌ தேதி மட்டும்‌ வீரகேரளம்‌, தென்றல்‌ நகர், விநாயகா கோவில்‌ வளாகத்திலும்‌, 19ஆம்‌ தேதி வடவள்ளி ரோடு- கார் சர்வீஸ்‌ சென்டர் பகுதியிலும்‌, 18ஆம்‌ தேதி வார்டு எண்‌.75 நேதாஜி வீதி- மாரியம்மன்‌ கோவில்‌ மைதானம்‌ பகுதியிலும்‌, 19ஆம்‌ தேதி சீரநாயக்கன்பாளையம்‌ பகுதியிலும்‌ நடைபெற உள்ளது.

தெற்கு மண்டலத்தில், வார்டு 99இல்‌ ஸ்ரீராம்‌ நகர் பகுதியிலும்‌, வார்டு 100இல்‌ ஆடிட்டர் காலனி பகுதியிலும்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்கள்‌ 12, 13இல்‌ உருமாண்டம்பாளையம்‌ அலுவலகத்திலும்‌, வார்டு எண்‌.14இல்‌ மேட்டுப்பாளையம்‌ ஸ்ரீவத்சா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலும்‌, வார்டு எண்‌.19இல்‌ மணியகாரன்பாளையம்‌ - அம்மா உணவகம்‌, வார்டு எண்‌.21இல்‌ ஜனதா நகா்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.25இல்‌ காந்தி மாநகா்- அரசு மேல்‌நிலைப்பள்ளியிலும்‌, வார்டு 28இல்‌ காமதேனு நகா்‌ - வார்டு அலுவலகத்திலும்‌, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.32இல்‌ சிறுவர் பூங்கா, சங்கனூர்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு 62 சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு- எண்‌.63இல்‌ ஒலம்பஸ்‌ 80 அடி ரோட்டில்‌ உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலும்‌, வார்டு எண்‌.80இல்‌ கெம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்பப்‌ பள்ளியிலும்‌, வார்டு எண்‌.84இல்‌ ஜி.எம்‌. நகரில்‌ உள்ள தாகத்‌ இஸ்லாம்‌ பள்ளியிலும்‌ நடைபெற உள்ளது.

மேலும்‌, மார்ச் 31ஆம் தேதி வரை சனி மற்றும்‌ ஞாயிற்றுக்‌கிழமைகளில்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ வழக்கம்‌ போல்‌ காலை 9மணி முதல்‌ மாலை 4வரை செயல்படும்‌. எனவே, பொதுமக்கள்‌ இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்த வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...