பராமரிப்பு பணி காரணமாக சேரன்மாநகர் சுற்றுப்புறப் பகுதிகளில் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் 22.06.2022 அன்று காலை 6:00 மணி முதல், 23.06.2022 இரவு 12:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.


கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பகுதிகளில், நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் தடைப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு கூறியதாவது: பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டக் குடிநீர் குழாயில் அவசர பராமரிப்பு பணிகள் 22.06.2022 (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் 22.06.2022 அன்று காலை 6:00 மணி முதல், 23.06.2022 இரவு 12:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் 23.06.2022 (வியாழன்) அன்று 12.00 நள்ளிரவுக்கு பின் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டு கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...