நுண்ணீர் பாசன அமைப்புக்கு 100 சதவீதம் வரை மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

நுண்ணீர் பாசன அமைப்புக்கு 100 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுவதாகவும், இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சராசரி மழையளவைவிட 50 சதவீதத்துக்கும் குறைவான மழையே பெய்துள்ளது. நடப்பு ரபி பருவத்தில் பயிர் செய்துள்ள ஆண்டுப் பயிர்களான மக்காச் சோளம், பயறு வகைகள், பருத்தி, கரும்பு போன்ற பயிர்களையும், நீண்ட காலப் பயிர்களான தென்னை, எண்ணெய்ப் பனை போன்ற பயிர்களையும் தற்போது நிலவி வரும் வறட்சிப் பாதிப்பிலிருந்து காத்திட வேண்டும்.

உயர் தொழில்நுட்ப முறையில் குறைந்த அளவு நீரைக் கொண்டு நுண்ணீர் பாசனம் அமைத்து, சொட்டுநீர் அல்லது தெளிப்பு நீர்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்துள்ள பயிர்களைக் காப்பாற்ற முடியும்.

2016-17 ஆம் நிதியாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் மக்காச்சோளம், பயறு வகைகள், நிலக்கடலை, பருத்தி, கரும்பு, தென்னை, எண்ணெய்ப்பனை மற்றும் இதர பயிர்களுக்கு வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் சொட்டு நீர்ப் பாசனக் கருவிகள் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் அமைத்துத் தரப்பட்டு வருகிறது.
 à®¨à®¿à®•ழாண்டில் நாமக்கல் மாவட்டத்திற்கு 630 ஹெக்டேர் (1575 ஏக்கர்) அளவுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு பெறப்பட்டு, வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து நிலமுடைய விவசாயிகள் மற்றும் 10 ஆண்டுகள் நிலக் குத்தகைக்குப் பதிவு செய்தவர்களும் இத் திட்டத்தில் பயன் பெறலாம். மகளிர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு (5 ஏக்கருக்குள்) 100 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு (5 ஏக்கருக்கு மேல்) 75 சத மானியமும் வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 12.5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.

இத் திட்ட மாநில செயலாக்க முகமையான தமிழ்நாடு தோட்டக் கலை வளர்ச்சி முகமை மூலம் 34 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தாங்கள் விரும்பும் நிறுவனங்களை தாங்களே சுயதேர்வின் மூலம் தேர்வு செய்து நுண்ணீர் பாசனம் அமைத்து கொள்ளலாம்.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற வருவாய்த் துறை கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல், வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று அல்லது இதர விவசாயிகளான பட்சத்தில் 25 சதப் பங்குத் தொகைக்கான வங்கி வரைவோலை ஆகிய ஆவணங்களை வழங்க வேண்டும்.

 à®‡à®¤à¯ திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், அந்தப் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

Newsletter