பனை வெல்லத்தின் மருத்துவ குணங்கள் குறித்த விழிப்புணர்வு

அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில், பனை வெல்லத்தின் மருத்துவக் குணங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அனந்தபுரம் அரசுப் பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சமுதாய தலைவர் அ.ஜேசுஜூலியல்ராஜா தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் அலில் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஆஷாமேரி வரவேற்றார். ரோட்டரி சமுதாய பொருளாளர் முரளிதரன், பனை வெல்லத்தின் சிறப்பு, மருத்துவக் குணங்கள் குறித்து விவரித்தார்.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பனை வெல்லத்தின் சிறப்புகள் அவற்றால் குணமாகும் நோய்கள் குறித்து விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பள்ளி ஆசிரியர்கள் யூஜின்பெர்ணாட்ஸ், மஞ்சுபார்கவி, மோகனசெல்வி, ரோட்டரி சமுதாய நிர்வாகிகள் ஜெயகுமார், சாம்பிரசாத், விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter