நெற்பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகள்: வேளாண் அதிகாரிகள் விளக்கம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில், நெற்பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரிக்க மேற்கொள்ளவேண்டிய தொழில்நுட்பம் குறித்து ராயபுரம் கிராமத்தில் அண்மையில் செயல்விளக்கம் நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரெ.பாஸ்கரன் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் மீனா வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் நெற்பயிர்களுக்கு ரசாயன மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நெற்பயிர்களுக்கு நன்மைசெய்யும் பூச்சிகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர்கள் அ.காமராஜ், வெ.சிவகுமார், மருத்துவர் செ.சரவணன், நீடாமங்கலம் உதவி வேளாண்மை அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ஏழுமலை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter