திருப்பூர் தெற்கு, பொங்கலூர் விவசாயிகள் கவனத்துக்கு...

திருப்பூர் (தெற்கு) உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு விவசாயிகள் புதிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பின்படி, திருப்பூர் தெற்கு மற்றும் பொங்கலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது நிலத்தில் பயிரிட்டுள்ள விளைபொருள்களுக்கு உரிய சாகுபடி சான்றிதழை வருவாய்த் துறையில் பெற்று, திருப்பூர், பொங்கலூர் தோட்டக்கலை உதவி இயக்குநரிடம் ஆவணங்களை வரும் மார்ச் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து, தங்களுக்கான அடையாள அட்டையைப் புதிதாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் புதிய அடையாள அட்டை வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே, திருப்பூர் (தெற்கு) உழவர் சந்தையில் விளைபொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், இது குறித்த விவரங்களுக்கு, திருப்பூர் தெற்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter