மலர், காய்கனி கண்காட்சியில் ரூ. 1 கோடிக்கு விற்பனை: அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 3 நாள்கள் நடைபெற்ற மலர் மற்றும் காய்கனி கண்காட்சியில் ரூ. ஒரு கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. மொத்தம் 4 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டனர் என வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.

வேளாண்மை துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்ட மலர் மற்றும் காய்கனி கண்காட்சியை, முதல்வர் நாராயணசாமி கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

வேளாண் துறை, கால்நடை துறை, மீன்வளம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லுôரி, விதைச் சான்று மையம், தேசிய தோட்டக்கலை இயக்ககம் மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளுக்கு தனித் தனியே அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

50 ஆயிரம் மலர்ச் செடிகள்: இங்கு உள்ளூர் மட்டுமன்றி புணே, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட 50 ஆயிரம் மலர்ச் செடிகள், புதுச்சேரி வேளாண்துறை மூலம் உற்பத்தி செய்த மலர் செடிகள், போட்டியாளர்களிடம் தருவிக்கப்பட்ட மலர் செடிகள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அலைமோதிய மக்கள் கூட்டம்: இந்த நிலையில், இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியைக் காண பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
 à®°à¯‚.1 கோடிக்கு விற்பனை: ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு விழா நடைபெற்றது. வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் கண்காட்சியை நிறைவு செய்து பரிசுகள் வழங்கிப் பேசியதாவது:

வேளாண்துறை மூலம் மலர் மற்றும் காய்கனி கண்காட்சி சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் ரூ. ஒரு கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. 4 லட்சம் பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஒரு மாதத்துக்கு முன்பே மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தொடங்கி செய்து வந்தனர்.

உதகையில் நடைபெறும் மலர் கண்காட்சி போன்ற தோற்றத்தை உருவாக்கி முடித்துள்ளனர்.

இந்த அறிய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கண்காட்சியை கூடுதல் நாள்கள் நடத்த முடியாது என்பதால், விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்காட்சி மலர்கள், மரக்கன்றுகள், செடிகளின் விற்பனை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கண்காட்சியை கூடுதல் நாள்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மலர் ராஜா, ராணி, காய்கனி ராஜா, ராணி : மலர் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியைச் சேர்ந்த முத்தம்மாளுக்கு மலர் ராணி பட்டமும், காலாப்பட்டு கந்தபிரான் என்பவருக்கு மலர் ராஜா பட்டமும், காய் கனி பிரிவில் பூரணாங்குப்பம் செந்தாமரைக்கு காய்கனி ராணி பட்டமும், சந்தை புதுக்குப்பம் செந்தில்குமாருக்கு காய்கனி ராஜா பட்டமும் அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார். மேலும், 9 பிரிவுகளில் 115 உட்பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு 345 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter