பெய்து வரும் கனமழையால் சம்பா சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் வேதனை

விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சம்பா சாகுபடி பாதிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். à®µà®™à¯à®•க் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால், கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மோட்டார் பைப்புகள் மூலம் தண்ணீர் இறைத்து பயிரிடப்பட்ட நெல், மணிலா, உளுந்துப் பயிர்கள் நீரில் மூழ்கின.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்தமழை பெய்து வருகிறது. நடப்பாண்டில் தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் முழுவதும் பாதித்த நிலையில் மோட்டார் பைப்புகள் மூலம் தண்ணீர் இறைத்து பயிரிடப்பட்ட பயிர்கள், கனமழையால் முழுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உளுந்து பயிர் சாகுபடியும் முழுவதுமாக பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Newsletter