பெய்து வரும் கனமழையால் சம்பா சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் வேதனை

விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சம்பா சாகுபடி பாதிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால், கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மழை பெய்தது.

குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மோட்டார் பைப்புகள் மூலம் தண்ணீர் இறைத்து பயிரிடப்பட்ட நெல், மணிலா, உளுந்துப் பயிர்கள் நீரில் மூழ்கின.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்தமழை பெய்து வருகிறது. நடப்பாண்டில் தண்ணீர் இன்றி சம்பா பயிர்கள் முழுவதும் பாதித்த நிலையில் மோட்டார் பைப்புகள் மூலம் தண்ணீர் இறைத்து பயிரிடப்பட்ட பயிர்கள், கனமழையால் முழுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உளுந்து பயிர் சாகுபடியும் முழுவதுமாக பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Newsletter

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்ற...

வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்ற...

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு...

நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படு...

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி வ...