1 கிலோ முட்டைகோஸ் ரூ. 1-க்கு விற்பனை: பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள்

ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ. 1-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் ஆறு, குளம், அணைகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. நகரப் பகுதிகள் மட்டுமின்றி பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளிலும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. வறட்சி அதிகரித்ததால் இத்தலார், முள்ளிகூர், நஞ்சநாடு ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தண்ணீர் போதுமான அளவு கிடைக்காததால் விவசாயிகள் பயிரிட்டிருந்த கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் மகசூல் குறையத் தொடங்கியது. மேலும், விளைபொருளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், தற்போது அறுவடை செய்யப்படும் முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ. 1 மட்டுமே விலை கிடைப்பதால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, போர்த்தியாடா பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:

தண்ணீர் பற்றாக் குறையால் விவசாயத்துக்குத் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கையிருப்பில் இருந்த தண்ணீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் பயிர்கள் நீரின்றி கருகி வருகின்றன. மேலும், போதிய ஈரப்பதம் இல்லாததால் காய்கறிச் செடிகளில் பூச்சித் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளுக்குத்தான் அதிக விலை கிடைக்கிறது. எனவே, மலைப் பகுதி விவசாயிகளுக்கு விளைநிலங்களில் கிணறு தோண்டத் தேவையான நிதியாதாரத்தை வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

Newsletter

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்ற...

வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்ற...

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு...

நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படு...

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி வ...