செங்கரும்புகளை அரசே கொள்முதல் செய்யக் கோரிக்கை

மேச்சேரி ஒன்றியத்தில் செங்கரும்பு விவசாயம் செழிக்க அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேச்சேரி ஒன்றியத்தில் பொட்டனேரி, அரங்கனூர், வெள்ளார், கரும்புசாலியூர் மற்றும் பல கிராமங்களில் விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். பொங்கலுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு விவசாயிகள் உள்ளனர். கரும்பு வியாபாரிகள் ஜோடி கரும்பு ரூ.20க்கு விவசாயிகளிடம் வாங்கி ஜோடி ரூ.100-க்கு விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஏக்கருக்கு 12 ஆயிரம் கரனை கரும்பு பயிரிட்டு ரூ.1 லட்சம் வரை விவசாயிகள் செலவிட்டுள்ளனர். நிகழ் ஆண்டு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கியதுபோல அடுத்த ஆண்டிலும் தமிழக அரசு வழங்க வேண்டும். அரசே நேரடியாக கரும்புக்கு விலை நிர்ணயித்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்தால் செங்கரும்பு விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் என மேச்சேரி கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter