விவசாயிகளுக்கான வானிலை: செல்லிடப்பேசியில் குறுந்தகவல்

வானிலை தொடர்பான அறிவிப்புகளை விவசாயிகளின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் புதிய சேவையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விவசாய வானிலை பிரிவு மற்றும் வேளாண் துறையின் பிரிவான புவி அறிவியல் துறையும் இணைந்து இந்தச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதன்படி, தமிழக விவசாயிகள் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ஜ்ஜ்ஜ்.ண்ம்க்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சென்று தங்களின் 10 இலக்க செல்லிடப்பேசி எண்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் அதில் எந்த மாநிலம் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர், என்னென்ன பயிர்கள் பயிரிடுவார் (ஒருவர் 5 பயிர்கள் வரை குறிப்பிடலாம்) என்பதையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்களுக்கான மொழியையும் தேர்வு செய்ய வேண்டும். ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் இந்தச் சேவை அளிக்கப்பட உள்ளது.

இந்த இணையதளத்தில் சென்று ஒரு விவசாயி பதிவு செய்துவிட்டால், அவருக்கு விவசாயம் தொடர்பான வானிலை முன்னறிவிப்புகள் செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த விவசாயி பதிவு செய்த குறிப்பிட்ட பயிர்களுக்கான பிரத்யேக வானிலை முன்னறிவிப்பும் வாரம் ஒரு முறை அனுப்பப்படும். விவசாயிகளுக்கு ஏதேனும் வானிலை முன்னெச்சரிக்கை இருந்தாலும் அதுவும் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter