அதிரையில் கேரள அன்னாசிப் பழங்கள் விற்பனை தொடக்கம்

அன்னாசி பழத்தை உண்பதால் முகத்தில் பொலிவு ஏற்படும், இருதய நோய்கள் குணமாகும். உடலிலுள்ள கெட்ட கொழுப்பு கரையும். இதுபோன்ற பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டது அன்னாசி பழம்.   
குறிப்பாக கேரளத்தில் விளையும் அன்னாசி பழங்கள் அதற்குரிய மருத்துவ குணங்களுடன், அதிக ருசியும் கொண்டவை. தற்போது கேளரத்தில் அன்னாசி பழ அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால் அங்கிருந்து பழங்களை மொத்த விலைக்கு வாங்கி வரும் தமிழக வியாபாரிகள் மினி லாரியில் அவற்றை ஏற்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சென்று சில்லறை விலைக்கு விற்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைவீதியில் புதன்கிழமை இந்தப் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

பழங்களை விற்க வந்துள்ள கடலூர் வியாபாரி பழனிவேல் கூறியது: கேரளத்திலிருந்து அன்னாசி பழங்களை மொத்தமாக வாங்கி டெம்போ வாகனத்தில் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று சில்லறை விலைக்கு விற்கிறோம். ஒரு பழம் எடைக்கு ஏற்ப ரூ. 30 முதல் ரூ. 50 வரை விற்கிறது. சுமார் 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடையுள்ள பழங்களை அதிரை பகுதி மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். எதிர்பார்த்ததைவிட இங்கு விறுவிறுப்பாக விற்பனை நடக்கிறது என்றார்.

Newsletter