ஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்

இயற்கை வேளாண்மை முறை சுற்றுச் சூழலுக்கு உகந்ததும், நிலையானதும் ஆகும். குறைந்த செலவில் அதிக உற்பத்தி மற்றும் லாபம் தரக் கூடியதுமாகும். இராசயன வேளாண்மை முறையில், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு ரசாயனப் பொருட்கள் இவற்றை சந்தையிலிருந்து வாங்குவதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மை முறையில், அனைத்துப் பொருட்களும் ஒருவரது பண்ணையிலிருந்தே கிடைக்கப் பெறும்.இந்த அமைப்பில், கிராமப்புறப் பகுதியிலுள்ள உள்நாட்டுக் கால்நடைகள் வேளாண் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்தவைகளாக இருக்கின்றன. விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் சரியான வளர்ப்பு முறை பின்பற்றப் பட்டு விளையும் பயிர்களிலிருந்தே நல்ல தரமான விதைகளை எடுத்துப் பயன்படுத்துகின்றனர்.

இயற்கை வேளாண்மை முறையின் பயன்கள்:- விவசாயச் செலவைக் குறைக்கின்றது. உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகரிக்கின்றது. நிலையான விவசாய வளர்ச்சியினை அடைய முடியும். மண்ணின் தரத்தைப் பாதுகாத்து, ரசாயன உரங்களின் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் நச்சுத் தன்மையை அகற்ற முடியும். ஆரோக்கியமான தூய்மையான உணவுப் பொருட்களை மக்கள் பெற்றுப் பயனடைவர். உற்பத்திப் பொருட்களின் நீண்ட ஆயுள், காய்கறி மற்றும் பழங்களின் சுவை, அதிகரிக்கும். நிலத்தடி நீர் தரம் பாதுகாக்கப்படும.

பூச்சிக் கொல்லிகள் இன்மையால், வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் பூக்களை நோக்கி வரும்.அதனால் அதிக மகரந்த சேர்க்கையும், அதிக உற்பத்தியும் ஏற்படும். இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப் படும் நீர் உரங்கள் மண்ணிலிருந்து சத்துக்கள் பயிர்களைச் சென்றடைவதற்கு உதவுவதுடன், மண்ணின் வளத்தையும் காக்கும் ரசாயன முறை வேளாண்மையின் முந்தைய அனுபவங்கள. ரசாயன முறை வேளாண்மை விவசாயிகளை விலை மிகுந்த ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றின் மீது சார்ந்திர்க்க வைக்கின்றது. இத்தகைய உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப் பயன்பாடு நாளுக்கு நாள் விவசாயச் செலவை அதிகரிக்கின்றது. உற்பத்தி அதிகரிப்பதில்லை, உண்மையில் அது குறையவே செய்கின்றது.

இலை தழை முதலியன மக்கிய தோட்ட மண் குறைந்து, ரசாயனப் பொருள் அதிகரிக்கின்றது.ஆகவே மண் செழிப்பற்றதாகின்றது.

உணவுத் தானியங்கள், கைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றில் பூச்சிக் கொல்லிகளின் மிச்சம் தங்கி, அது மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கின்றது.

மேற்ப்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுகின்றன. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் அருந்தப் பாதுகாப்பற்றதாகி விடுகின்றது.

வேளாண்மை லாபமற்ற சிக்கலான தொழிலாகி, சிறிய விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஜிஎம்ஓ விதைகள் விவசாயிகளுக்குத் துன்பத்தையே தருகின்றன.

பூஜ்ய செலவு இயற்கை வேளாண்ம: இது கனஜீவாம்ருதம், பீஜாம்ருதம், ஜீவாம்ருதம்,உரித்தல், வாபாசா ஆகியவற்றின் பயன் பாட்டுடைய முக்கிய இயற்கை வேளாண்மை கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தது. இவற்றைத் தயாரிக்க நீர், மண், பசுஞ்சாணி, பசுவின் சிறுநீர், எலுமிச்சம் பழம், தானியங்களின் மாவு, வெல்லம் ஆகியவை தேவை.

பயிர்ப்பாதுகாப்பு:- பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கும்போது அக்னியாஸ்த்ரம், பிரம்மாஸ்திரம், நீமாஸ்திரம், பூசனம் 1 பூசனம் 2 பூச்சிக்கொல்லி 1 பூச்சிக்கொல்லி 2, பூச்சிக்கொல்லி 3ஆகியவை பரிந்துரைக்கப் படுகின்றன. நோய்தடுப்பு அல்லது நோய்க் குணப் படுத்துதல் என்னும் முறையில், இந்த பூஞ்சைகளும் பூச்சிக் கொல்லிகளும் விவசாயியாலேயே தயாரிக்கப்படலாம்.

10 வகை தானங்களும் அதன் பலன்களும்:- பொதுவாக தானங்களில் பல வகை உண்டு. ஒவ்வொரு தானத்திற்கும் அதற்குரிய பலன்கள் உண்டு. இதோ உங்களுக்காக இங்கே சில பலன்கள்:

  • பசுவை தானம் செய்தால் ரிஷிகடன், தேவகடன், பித்ரு கடன் போன்றவை தீரும்.
  • அரிசியை தானம் செய்தால் பாவம் போக்கும்.
  • உடையை தானமாக கொடுத்தால் ஆயுள் வளரும்.
  • பாயாச தானம் பித்ருக்களுக்கு உகந்ததாகும். சந்ததி வ்ருத்தி அடையும்.
  • தேனை ஒரு வெண்கலப் பாத்திரத்தில் வைத்து தானம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
  • அன்னதானம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்.
  • பூமி தானம் பிரம்மலோகத்தைத் தரும்.
  • பழம் மற்றும் தாம்பூழம் தானம் செய்தால் சொர்கத்தைத் தரும்.
  • குடை, பாதுகை போன்ற தானம் எமலோகத்தில் இன்பம் தரும்.
  • எள்ளு தானம் எமலோக பயத்தை அகற்றும்.

Newsletter