வறட்சி பாதித்த மாவட்டமாக நாகையை அறிவிக்க வேண்டும்: கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்

வறட்சி பாதித்த மாவட்டமாக நாகையை அறிவிக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம், குத்தாலத்தில் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், கோட்டூர் ஸ்ரீஅம்பிகா, திருமண்டலகுடி திருஆரூரான், தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். சர்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள்  à®†à®²à¯‹à®šà®©à¯ˆà®•் கமிட்டித் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

செயலர் கோவிந்தராஜன் வரவேற்றார். தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்  à®¤à®²à¯ˆà®µà®°à¯ கே.வி. ராஜ்குமார், பொதுச் செயலர்  à®µà®´à®•்குரைஞர் டி. பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

2013-ஆம் ஆண்டு முதல் கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு அறிவித்த விலையையும், 2004-2009 பருவத்துக்கு  à®®à®¤à¯à®¤à®¿à®¯ அரசு கொடுத்த விலை ரூ. 350-ஐ உடனடியாக  à®µà®´à®™à¯à®• வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளின் வழிவகை கடன் ரூ. 2,200 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.

வறட்சி பாதித்த மாவட்டமாக நாகையை அறிவிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிப்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter