பருவமழை பொய்த்ததால் 2 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகின: விவசாயிகள் வேதனை

வானூர், மரக்காணம் உள்ளிட்ட கழுவெளிப் பகுதியில், இந்தாண்டு பருவமழையை நம்பி நேரடி விதைப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

 à®µà®¾à®©à¯‚ர், மரக்காணம் வட்டாரத்தில் கிளியனூர், எடச்சேரி, காரட்டை, கழுப்பெரும்பாக்கம், ஆன்பாக்கம், கொடூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.

 à®…வ்வப்போது பொழிந்த மழையில் முளைத்து வளர்ந்த நெற்பயிர்கள், தொடர்ந்து மூன்று மாதங்களாக தேவையான மழைப் பொழிவு இல்லாததால் கருகிவிட்டன.

 à®•ழுவெளிப் பகுதியில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலும் கருகிவிட்டதால் தற்போது, அதனை மாடுகளை விட்டு மேய்க்கும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

 à®‡à®¤à¯ குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் வழக்கம் போல் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளோம். லேசாகப் பெய்த தென்மேற்குப் பருவமழையில் விதைகள் முளைத்தும், பின்னர் பலமாகப் பெய்யும் வடகிழக்குப் பருவமழையில் விளைச்சல் முற்றி அறுவடைக்கு வந்துவிடும்.

 à®†à®©à®¾à®²à¯, தற்போது வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டதால், பயிர்கள் கதிர் முற்றும் தருவாயில் அப்படியே கருகிவிட்டன. இதனால், ஏக்கருக்கு சுமார் ரூ. 15 ஆயிரம் செலவு செய்து, பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கருகிய பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யுமாறு வேளாண் துறையினரிடம் கோரிக்கை விடுத்தோம்.

 à®†à®©à®¾à®²à¯, காப்பீடு செய்வதன் மூலமே இழப்பீடு கிடைக்கும் என்று அவர்கள் கைவிரித்து விட்டனர் என்றனர்.

 à®‡à®¤à¯ குறித்து, வேளாண் இணை இயக்குநர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Newsletter