மஞ்சள் விலை அறுவடையின் போது நிலையாக இருக்கும்


இந்தியா, உலகின் முன்னணி மஞ்சள் உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளராக இருக்கிறது. இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் முன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2015- 16 ஆம் ஆண்டில் இந்தியாவில், மஞ்சள் 1.85 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 9.57 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மஞ்சள் உற்பத்தி முன்னணியில் தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகியவை மஞ்சள் பயிரிடப்படும் முக்கிய 

மாவட்டங்களாகும். 

இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 92 சதவிகிதம் இந்தியாவிலேயே நுகர்வு செய்யப்படுகிறது. மீதமுள்ள மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், ஈரான், மலேசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய அரசு நாடுகள் ஆகிய வெளிநாடுகளுக்கு மஞ்சள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக நடப்பு பருவத்தில் மஞ்சள் உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தொடர் வறட்சியினால் மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது. வர்த்தக மூலங்களின் படி, தமிழ்நாட்டில் 7-10 லட்சம் மஞ்சள் மூட்டைகள் (1 மூட்டை 75 கிலோ) நல்ல விலையை எதிர்பார்த்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு பருவத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக வர்த்தக மூலகங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ்நாட்டில் தற்போது மஞ்சள் வரத்து பவானி, சத்தியமங்கலம் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் இருந்து வருகிறது. மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உற்பத்தி குறைந்தாலும், மஹாராஷ்டிராவிலிருந்து வரும் மஞ்சள் வரத்து தமிழ்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கிவரும் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 19 ஆண்டுகளாக ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மஞ்சள் விலையை ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.  à®†à®¯à¯à®µà¯à®•ளின் அடிப்படையில் தரமான மஞ்சளின் விலை அறுவடையின் போது (ஜனவரி- பிப்ரவரி) குவிண்டாலுக்கு ரூபாய் 8,000 முதல் 8,500 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Newsletter