மழையை நம்பி விவசாயிகள் நடவுப் பணி

காரைக்கால் பகுதிகளில் மழையை நம்பி நடவுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
காரைக்கால் மாவட்டத்தின் நெடுங்காடு, பத்தக்குடி விளைநிலைப் பகுதியில் நாற்றுகள் தயார் செய்து, விவசாயிகளுக்கு தரப்பட்டது. ஆழ்குழாய் பாசனம் மற்றும் குளங்களில் தேங்கியிருந்த தண்ணீரைப் பயன்படுத்தி, சில இடங்களில் நடவுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

 à®¤à®¿à®°à¯à®¨à®³à¯à®³à®¾à®±à¯ பகுதி பூமங்களம், பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் நாற்றங்கால் தயார் செய்து, தற்போது நடவுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

நெடுங்காடு, திருநள்ளாறு ஆகிய பகுதிகளில் வெகு குறைவான நிலப்பரப்பிலேயே  சம்பா சாகுபடிப் பணிகள் நடைபெறுகின்றன.  இதுகுறித்து பூமங்களம் கிராமத்தில் நடவுப் பணி செய்யும் விவசாயி புஷ்பநாதன் வெள்ளிக்கிழமை கூறியது: நிகழாண்டு காவிரி தண்ணீர் வரவில்லை. வடகிழக்குப்  பருவமழையும் இதுவரை தொடங்கவில்லை.  குளம், வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் எடுத்து வேளாண் பணியை செய்கிறோம். இதற்கு கூடுதல் செலவாகிறது.  அடுத்த சில நாள்கள் பருவமழை பெய்தால் மட்டுமே தற்போது நடவு செய்யும் பயிரும், ஏற்கெனவே நடவு செய்த பயிரையும் காப்பாற்ற முடியும் என்றார்.
 
ஒருசில இடங்களில் மட்டுமே இருக்கக்கூடிய நீராதாரத்தைக்கொண்டு விவசாயிகள் பயிர் செய்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் நிலத்தில் உழுதல் பணி முடித்து அதே நிலையில் வைத்திருக்கின்றனர்.
 
கூலித் தொழிலாளர்கள் கோரிக்கை: சம்பா சாகுபடி காலத்தில் விளைநிலத்தில் வேலை செய்யக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். காரைக்காலில் வேளாண் பணிகள் வெகுவாகப் பாதித்துவிட்டன. 100 நாள் வேலைத் திட்டமும் இல்லை.  தொழிலாளர்களுக்கு புதுச்சேரி அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூலித் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

Newsletter