கேரட் விலை வீழ்ச்சி: நீலகிரி விவசாயிகள் கவலை

கடந்த ஒரு மாத காலமாக கேரட் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் நீலகிரி பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி மண்டி விற்பனையாளர் எஸ்.எம்.டி. செல்வராஜ் கூறியதாவது:

நீலகிரி மாவட்டப் பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்கு, கோஸ், கேரட், பீன்ஸ், முள்ளங்கி, பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளுக்கு முக்கிய விற்பனை கேந்திரமாக மேட்டுப்பாளையம் நகரம் உள்ளது. இங்கு தினசரி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு,  à®ªà®²à¯à®µà¯‡à®±à¯ மாவட்டங்கள், கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படுகின்றன. தேவை அதிகரிக்கும்போது, நீலகிரி பகுதிகளிலிருந்து விவசாயிகள் கேரட்டை நல்ல விலைக்கு பெங்களூருக்கு அனுப்பி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நீலகிரி கேரட் நல்ல விலைக்கு விற்கப்பட்டதால், நீலகிரி விவசாயிகள் மற்ற பயிர்களைத் தவிர்த்து நடப்புஆண்டிலும் அதிக அளவில் கேரட் பயிர் செய்திருந்தனர்.

சீசன் துவக்கமான ஜூன் முதல் செப்டம்பர் வரை கேரட் விலை கிலோ ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்றது. ஆனால், கடந்த ஒரு மாதமாக கர்நாடக மாநிலம், மாலூர் பகுதியிலிருந்து கேரட் குறைந்த விலைக்கு பெங்களூரு செல்வதால், நீலகிரி கேரட் பெங்களூருக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் நீலகிரி கேரட் வரத்து அதிகமானதால் விலை வீழ்ச்சி அடைந்து, தற்போது கிலோ ரூ. 13 முதல் ரூ. 25 வரை விற்கப்படுகிறது. இந்த விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிப்பதால், நீலகிரி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி பகுதி விவசாயிகள் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் உருளைக்கிழங்கு அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் விதை கிழங்கு உள்பட விவசாய இடு பொருள்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகமானதால் பெரும்பாலான நீலகிரி விவசாயிகள் உருளைக்கிழங்குக்கு மாற்றாக கேரட் பயிரிட்டு வருகின்றனர். தற்போது நீலகிரி கேரட்டுக்கும் உரிய விலை கிடைக்காததால், மிகவும் கவலையடைந்துள்ளோம். ஆகவே, கேரட் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள்களை மானிய விலையில் வழங்கவும், உரிய விலை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Newsletter