நெல்லுக்கு காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள்

கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.ஆர்.முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30ஆம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில் அனைத்து நெல் பயிரிடும் விவசாயிகளும் சேர்த்து பயனடையவும், உரிய காலத்தில் திட்டத்தினை செயல்படுத்தி முடிக்கும் நோக்கிலும் வேளாண்மைத்துறை இணை இயக்குநரால் விவசாயிகளுக்கு புதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நெல் பயிரிடும் விவசாயிகள் வங்கியின் கடன் பெறும்போது, பயிர்க் காப்பீடு செய்ய ஏதுவாக அவர்களின் கடன் தொகையிலிருந்து பிரீமியம் தொகை பிடித்தம் செய்து உரிய நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கடன் பெறாத நெல் பயிரிடும் விவசாயிகளும் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யலாம்.

இதற்காக மத்திய அரசால் கடலூர் மாவட்டத்துக்கு பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி சிறப்பு பிரதிநிதிகள் சார்பில் குறிப்பிட்ட தேதிகளில் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடத்தில் நேரடியாக வருவாய் ஆவணங்கள் மற்றும் பிரீமியம் தொகையினை பெற்று அதற்குரிய ரசீது வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

Newsletter