வேளாண்பல்கலை சார்பில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சார்பில் ''வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி'' வரும் நவம்பர் 15 மற்றும் 16ம் தேதியன்று நடைபெறவுள்ளன. 

இந்நிகழ்வின் போது, கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் பயிற்சி வழங்கப்படும்

1. உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்

2. ஊறுகாய்

3. பலவகை பழஜாம்

4. தக்காளி கெட்சப்

5. பழரசம்

6. ஊறுகனி

7. தயார்நிலை பானம்

8. பழப்பார்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1500 செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நேரில் வந்து பெயரைப் பதிவு செய்துகொள்ள இயலாதவர்கள் பயிற்சிக் கட்டணத் தொகையை வரைவோலை மூலம் பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுக்க வேண்டும். இதனை பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். முன்பதிவு செய்து கொள்ள கடைசி நாள் நவம்பர் 15ம் தேதி ஆகும். இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 0422-6611340, 6611268 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.

Newsletter