விவசாயப் பணிகள்: திட்ட இயக்குநர் ஆய்வு

திருக்கோவிலூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் விவசாயத் திட்டப் பணிகளை மாவட்டத் திட்ட இயக்குநர் ஆர்.மணி திங்கள்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தேவியகரத்தில் நடைபெற்று வரும் மண்புழு உரம் தயாரிப்புப் பணி, கீழத்தாழனூரில் நடைபெற்று வரும் நாற்றங்கால் பணி, பூமாரியில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

பூமாரியில் 500 மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திருப்பாலப்பந்தலில் நடைபெற்று வரும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், செல்வராஜ், ஒன்றியப் பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், தனபால், ராதா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter